அஷேரா அஷேரா! குற்றவுணர்வும் காமத்தின் ஊடாட்டமும் sayanthan, April 22, 2024February 7, 2025 சயந்தனின் அஷேரா நாவல், ஈழப்போருக்குப் பிந்தைய போராளிகளின் மனநிலையை ஒளிப்படமாக குறிப்பிடுகிறது. பல்வேறு உணர்வுகளின் மையமாக, காதல், குற்றவுணர்வு மற்றும் தற்கொலை ஆகியவை கதையின் பங்கு. இக்கதையில் முன்னாள் போராளிகள் மற்றும் அகதிகள் அனைவரும் கடுமையான தண்டனைகள் மற்றும் வெளிவட்டார அணுகலை எதிர்கொள்கின்றனர். போரின் விளைவுகள், வாழ்க்கையின் சிக்கல்கள் மற்றும் காதலின் கஷ்டங்களுக்கு இடையிலான யுத்தமாக இந்த நாவல் உருவாகிறது. Continue Reading
பூரணம் sayanthan, March 22, 2024March 22, 2024 பதுங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது என்றாள். எட்டிப்பார்த்தால் ஆழ் கிணறு மாதிரி.. அதிஷ்டக்காரி, அழுது குழறாமலேயே ‘காயக்காரக் கப்பலில்’ இடம் பிடித்துவிட்டாள். இனி குண்டுச் சத்தங்களைக்… Continue Reading
புலம்பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது sayanthan, March 22, 2024March 22, 2024 சமகால ஈழ எழுத்தாளர்களுள் சயந்தன் குறிப்பிடத்தகுந்தவர். ”ஆறாவடு” நாவலின் மூலம் வெகுவாக அறியப்பட்ட இவரின் இரண்டாவது நாவலான “ஆதிரை“ (தமிழினி பதிப்பகம்) ஈழப்படைப்புக்களில் முக்கியமான வருகை. நாவல்களை மட்டுமல்லாது சிறுகதைகளையும் எழுதும் சயந்தனின் மிக அண்மைய சிறுகதையான “பூரணம்” விவாதத்திற்கு உள்ளானது. ஆதிரை என்கிற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இப்போது தன்னுடைய மூன்றாவது நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். நேர்கண்டவர்: அகரமுதல்வன் நாம் மீண்டும் மீண்டும் தமிழ் (தமிழக) அறிவுலகச் சூழலை… Continue Reading
அஷேரா! புனைவெனும் பொய் – நந்தா கந்தசாமி sayanthan, February 12, 2024March 22, 2024 ஒரு எழுத்து அது ஒரு நாவலாக இருந்தாலென்ன அல்லது அது ஒரு வெறும் கடதாசி எழுத்தாக இருந்தாலென்ன, புனைவெனிலும் அது உண்மைக்கு மிக அருகாக போகுமெனில் அது ஒரு மேன் இலக்கியம் ஆகின்றது . நான் “அஷேராவை” வாசிச்சு நொந்து போனேன். சயந்தனின் “அஷேரா” நாவலில் முதல் பக்கதில் தமிழீழ விடுதலை அமைப்புக்களை , தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TELO) இருந்து அட்டவணை படுத்திய சயந்தன், EROS, EPRLF, PLOTE மற்றும்… Continue Reading
ஆயாச்சி அல்லது கச்சான்காரப் பூரணத்தின் பேரன் சயந்தன், October 6, 2023March 22, 2024 ஆறாவடுவின் நான்காவது திருத்தமும் முடித்து, “இதுதான் எனது உச்சக் கொள்ளளவு. இதற்குமேலும் நீங்கள் எதிர்பார்க்கும் செழுமை என்னிடம் மருந்திற்கும் கிடையாது” என்று அனுப்பிவைத்தபோது தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொன்னார். “பரவாயில்லை. இது கெட்டிக்கார இளைஞன் ஒருவன் எழுதிய சுவாரசியமான பதிவுதான். ஒரு தொடக்கமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் கெட்டிக்காரத்தனம் மட்டுமே ஒரு நாவலை எழுதப் போதுமானதல்ல. அதற்கும் மேலாக ஒரு நிறைவான மனித மனம் தேவைப்படுகிறது. வாழ்வின் சகல பாடுகளையும்… Continue Reading