-
புருஜோத்தமன் தங்கமயில்
தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி 15 வருடங்களை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்றது வன்னிப் பெருநிலம். காடுகளும், களணிகளும், கடலும் சார்ந்த வன்னிப் பெருநிலம், தன்னுள் தன் பூர்வீகக் குடிகளை மாத்திரமின்றி மலையகத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்த பெருமளவு மக்களையும் ஒரு தாயின் உள்ளன்போடு உள்வாங்கிக் கொண்ட பூமி. வன்னிப் பெருநிலத்தைத் தவிர்த்து ஈழத் தமிழரின் வாழ்வையும், அரசியலையும், அதுசார் போராட்டங்களையும் இனி என்றைக்குமே பேசிவிட முடியாது. எங்கிருந்து ஆரம்பித்தாலும் வன்னிப் பெருநிலத்தையும், முள்ளிவாய்க்காலின் கடற்கரை…
-
டிசே தமிழன்
‘ஆதிரை’ நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, எல்லாவற்றையும் விட சயந்தனின் உழைப்பே வியக்கவைத்தது. இவ்வளவு பெரிய நாவலை எழுதுவது எவ்வளவு மிகப்பெரும் விடயமென்பது எழுதுபவராகவும், புலம்பெயர்ந்து இருப்பவராகவும் இருக்கும் ஒருவரால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும். புலம்பெயர்வை ஏன் இங்கு விசேடமாய்க் குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ் அவ்வளவு புழங்காத சூழலில் இருந்துகொண்டு, எழுதுவதின் கடினத்தைப் பற்றிச் சொல்கின்றேன். இவ்வளவு நிறையப் பக்கங்களில், புலம்பெயர்ந்த சூழலில் இருந்து வந்த படைப்புக்கள் எவையென்று யோசிக்கும்போது ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’, ‘வரலாற்றில் வாழ்தல்’ என்பவை உடனே…
-
ஆதவன் தீட்சண்யா
மணல்வீடு இலக்கிய வட்டம் 24.04.2014 அன்று சேலத்தில் நடத்திய விமர்சன அரங்கில் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரை 1970 ஆம் வருடத்திய இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழரசு மற்றும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வியடைந்தன. உயர் கல்வியில் பின்தங்கிய பிரதேசத்தவருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதன் பெயரால் இலங்கை அரசு ‘தரப்படுத்துதல்’ திட்டத்தை கொண்டுவந்தது. இலங்கை ஆட்சியாளர்களின் நோக்கம் எதுவாக இருப்பினும், சமூக நீதியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஒரு முதலடி இது. அதேவேளையில்…
-
அமல்ராஜ் பிரான்சிஸ்
மூன்றுவாரப் பயணம்… இன்றுதான் கடைசிப் பக்கத்தில் முட்டி பெரும் கனத்தோடு நிமிர்ந்திருக்கிறேன். ஆதிரை..! இது சுமார் இரண்டு தசாப்தகால ஈழத்து வாழ்வியலின் அடுக்கு. வன்னி, புலிகள், போராட்டம், இறுதியுத்தம், முள்ளிவாய்க்கால், மெனிக்பாம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, முன்னாள் புலிகள், மீண்டும் வன்னி என சுழலுகின்ற ஒரு பேரிடர்க்காலத்தின் அறியப்படாத முகம். அண்மைக்காலமாக ஈழத்திலிருந்து அதிக எதிர்பார்ப்புக்களோடு வெளியாகிய போர் சார் படைப்புக்களில் ஆதிரை முக்கியமானது என்றபோதுதான் அதை அவசரமாக படித்து முடித்துவிடவேண்டும் என்கின்ற ஏக்கம் தொற்றியது. அதை வாங்கி…
-
பாதசாரி
ஆதிரை நாவல் முதல் வாசிப்பு முடித்தேன். நுட்பங்களை தவற விடாமல் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.. அதற்குள் அவசரப் பட்டு எழுதத்தூண்டுது அந்தரித்த மனது..! வாழ்க்கைக்கும் வார்த்தைக்குமான இடைவெளித்தூரம் என்பது இந் நாவலில் ஒரு பெருமூச்சின் நீளமே… படைப்பு நோக்கத்தின் அடிப்படைத் தார்மீகம், படைத்த விதத்தில் நம்பகத்தன்மை, வெளிப்பாட்டில் அழகு என மூன்றிலும் பூரணத்தன்மையை நிறைத்துக் கொண்ட முழு நாவல் ஆதிரை… எங்கே தொடக்கம்…எங்கே முடிவு… என்பதான ஈழப்போராட்ட வரலாற்றை மானுட வாழ்வுப் பிண்ணனியில் மட்டுமே…
-
மோட்டார் சைக்கிள் குரூப்
முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்திற்கு சற்றுத்தள்ளி, தெருவிலிருந்து அடர் காட்டுக்குள், சமாந்தரமான இரு கோடுகளாய் இறங்கும் சிவப்பு மண் தெரிகிற பாதையில் சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகரங்களில் கரும் புகை அப்பிப் படர்ந்திருந்த குசினியையும், கானகத்தின் இருள் மெதுவாய் கவிகிற இடத்தில் பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட் உண்டு) முகாமையும் தாண்டினால், திடீரென வழியின் அருகாக இணையும் ஒரு நீரோடை மீண்டும் விலகுகிற இடத்தில் கிடுகு…