• அஷேரா! ஆறாவடுவின் தொடர்ச்சி – மல்லியப்புசந்தி திலகர்

    1990 களில்தான் ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இலங்கை வந்திருந்தபோது முதன் முறையாக புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்த அல்லது பார்த்ததாக நினைவு. அப்போது அவரை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்றுதான் அழைத்தோம். புலம்பெயர்ந்தவர் என்ற சொல்லே அப்போது தெரியாது. அவர் அழகாக இருந்தார். அவர் ஆங்கிலம் பேசும் அழகே தனியாக இருந்தது. அவரது நடை, உடை பாவனை, இலங்கை குறித்த பார்வை ( ஏளனமாக என்றுகூட கொள்ளலாம்) புலம்பெயர்ந்தவர்கள் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்கள்…

  • அஷேரா! உடல் உள ஏக்கங்களின் தேடல் – நிலாந்தி சசிகுமார்

    சயந்தனின் படைப்புகளில் ஆறாவடு, ஆதிரை வரிசையில் இன்று அஷேரா. இலங்கைக்கு சம்பந்தமற்ற ஒரு தலைப்பில் போருக்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டமைந்த புனைவுகளின் செறிவு. அஷேராவின் வரலாற்றுக்கும் உலகத்தின் அனைத்துப் பெண்களின் கதைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அந்தவகையில் தான் நாவலை நாம் நோக்க வேண்டும். அதே சமயம் நாவலின் நகர்வு ஈழப்போரின் தாக்கத்தின் விளைவுகளை மீட்டிச் சென்றதையும் கொஞ்சம் கவனிக்கவே வேண்டும். இலங்கையில் வாழ்பவர்களும், புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் தமது படைப்புகளில் ஈழப் போர் மற்றும் அதன் தாக்கங்கள்…

  • அஷேரா! ஈழத்தின் இன்னொரு முகம் – திராவிடமணி

    ஈழத்திலிருந்து அகதிகளாக சுவிற்சர்லாந்திற்கு வந்த அருள்குமரன், அற்புதம், என்ற இருவர் கடந்து வந்த பாதைகளின் வலிகளைப் பற்றிப் பேசும் புதினம். அருள்குமரனும், அற்புதமும் ஈழத்தில் பிறந்து, பல்வேறு இயக்கங்களைக் கடந்து உயிர்வாழ்தலின் தேவையுணர்ந்து அந்நாட்டிலிருந்து தப்பித்து சுவிற்சர்லாந்திற்கு வந்து… அகதிமுகாமில் தங்கி, அந்நாட்டுக் குடியுரிமைப் பெற்று வாழ முற்படுகிறார்கள். அவர்கள் இளமையில்,கண் முன்னே கண்ட கோரத் தாக்குதல்கள். இனப் படுகொலைகள். இயக்கங்கள், அவைகளின் முரணான செயல்பாடுகள், அதன் விளைவால் அவர்கள் பெற்ற வலிகள் இவற்றைப்பற்றியும் விரவாக இப்புதினம்…

  • அஷேரா! நீரோட்ட ஆழம் – கஜுரி புவிராசா

    துரோகங்களால் இன்று இந்த நிமிஷம் வரை வதைபட்டுக்கொண்டிருக்கிறது ஒரு இனம்… அதன் இன்னல்களை பட்ட வதைகளை சிந்திய சிவப்புத் துளிகளை தெறித்த நிணக்குழம்புகளை எல்லாம் எதிர்காலத்திற்கு கடத்தியாக வேண்டியது காலத்தினது மட்டுமல்ல ஒவ்வொருவருடைய கடப்பாடும்.. காயங்கண்ட சிம்மங்களோ புலிகளோ நாவால் அந்த காயத்தை வருடி வருடி வலி மிகச்செய்து தான் காயமாற்ற விளையும்…சில வன்மங்களும் அப்படித்தான்… சில நூல்களை மட்டும் தான் ஆத்மார்த்தமாக ஒரே மூச்சில் வாசித்து அப்பாடா என்று எமக்கே ஒரு ஆன்ம திருப்தியைக் கொடுக்கவியலும்….

  • அஷேரா! அற்புதம்மான் – நெற்கொழுதாசன்

    “அஷோராவின் அற்புதம்” என்பது, வார்த்தைகளுக்குள் உறைந்துபோய் விடக்கூடிய ஒரு உணர்ச்சியல்ல. ஒவ்வொரு பகுதிகளாக வரைந்து வரைந்து சட்டென முழுமையான சித்திரமொன்றை காட்சிப்படுத்தி உணர்ச்சிப்பிழம்பான மனநிலையை உருவாக்கிவிடுகின்றது. 0 மறந்துவிட, விலகிப்போக, மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற தவிப்பை தினம்தோறும் கொண்டலைகின்ற , அவற்றிலிருந்து வெளியேறி, தனக்கானதொரு வாழ்வை கண்டடைய முனையும் எத்தனிப்புக்களை கொண்ட மனிதர்களின் கதையிது. ஒன்றை சொல்லிவிடுகிறேன். மனிதர்கள் இப்படித்தான் இருக்கமுடியும். மனிதர்கள் நிலங்களால் பிணைக்கப்பட்டவர்கள். வேட்கைகளால் நிரம்பியவர்கள். நிலம் நீங்கியவர்களிடம் மிஞ்சி இருப்பது நிலம்…

  • அஷேரா! புனிதங்களை அசைக்கும் மொழிக்கற்கள் – சுரேகா பரமன்

    ஈழப்போராட்ட வரலாற்றையும் அதன் அதிர்வுகளையும் கண்ணீரும் இரத்தமுமாகப் பேசிய ஆதிரைக்குப்பின்னராக சயந்தன் அண்ணாவால் எழுதப்பட்டிருக்கின்ற அஷேரா நாவலானது , “போராட்டம் முடிவடைந்த பின்னர் தனி மனிதன், தன் அடுத்த கட்ட வாழ்வியலுக்குள் இயல்பாக நகரமுடியாது உழல்கின்ற தன்மையை தனிமனித போராட்டமாக உணர்வு கொந்தளிக்க பேசுகின்றது. தமிழீழம் என்ற ஒற்றை இலக்கிற்காக ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்த இயக்கங்கள் அத்தனையும் “தனிமனித தவிப்புக்களையும், தொடர்ச்சியான உளப்போராட்டங்களையுமே பரிசளித்துச் சென்றிருக்கின்றது. தனிநாடு கேட்டு போராடிய தமிழன் தன் இனத்திற்குள்ளேயே ஒருவனை ஒருவன் போட்டுக்கொடுத்து…

Follow Me On Instagram

@WillamSmith

This is how it all started…

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Maecenas sed fringilla velit, eget pulvinar lacus. Nulla risus nunc, accumsan eget eros eu, finibus efficitur leo. Fusce eget vehicula est, ac auctor augue. Praesent tincidunt non nulla eu aliquet. Mauris libero nisl, pellentesque et consectetur vitae, pulvinar eget massa. Quisque non pharetra ex. Nam quis ipsum luctus, consectetur elit nec, interdum justo. Vivamus ac cursus purus. Pellentesque in justo mauris. Vivamus vitae imperdiet nisl. Ut eget leo sollicitudin, rutrum est id, sagittis turpis.

Quisque iaculis rhoncus sem et elementum. Nullam non ante consequat, aliquet sapien at, tincidunt elit. Aliquam pharetra lobortis lorem, ac scelerisque metus pretium quis. Maecenas vitae dui vel tellus viverra tincidunt in et quam. Aliquam sed urna id lacus tempor mollis vel nec nisi. Phasellus sed urna nec ligula egestas accumsan sed eu ante. Mauris sit amet nisi lorem. Curabitur feugiat ante sed eros tincidunt, ac facilisis enim iaculis. Nulla sodales ac lectus sit amet dictum. In volutpat urna vel leo egestas sagittis. Praesent ornare vulputate massa, non bibendum libero egestas in. Suspendisse semper, ante et faucibus aliquam, risus ligula bibendum eros, id varius lacus eros nec leo. Sed sit amet nibh in lorem ornare congue. Mauris nec massa auctor, interdum erat vitae, tristique tortor. Aliquam accumsan nec velit ut volutpat.

William Smith

Writer & Journalist