-
அஷேரா! மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்
“கையைச்சுடும் என்றாலும் தீயைத்தொடும் பிள்ளைபோல்” நான் ஏன் தேடி தேடி ஈழக்கதைகளை வாசிக்கிறேன் என்று புரியவில்லை. எப்படியாவது வாழ்ந்துவிட துடிக்கும் மக்களின் கதை. உயிர் வாழும் ஆசை எந்த எல்லைக்கும் துரத்தக்கூடியது . அற்புதம் கடைசி முறையாக இலங்கையில் இருந்து கிளம்புவதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அருள்குமரன்களும், அற்புதங்களும்தான் ஈழத்தின் அசலான முகங்கள் என்று தோன்றுகிறது. விடுதலைக்காக போராடும் இயக்கங்கள் கூட துரோகமும், வக்கிரமும், வெறியுமாக திரிவதை பார்க்கும்போது மனிதம் மீதான நம்பக்கையே அற்று போகிறது. மனித மனத்தின்…
-
அஷேரா! ஒரு திரைக்கதைக்குரிய நாவல் – கிசாந்த்
சயந்தன் அண்ணாவின் மற்றுமொரு நாவல். ஆதிரையே அவரது படைப்புகளில் உச்சம் என்பதே என் கருத்து. இந்த நாவலின் பின்னும் அது மாறாது காணப்படுகிறது. மீண்டும் Non-linear முறையிலான கதைசொல்லும் பாங்கினை கையில் எடுத்துள்ளார். அருள்குமரன், அற்புதம் ஆகியோரின் வாழ்வின் பின்னலாக கதை வளர்ந்து செல்கிறது. ஈழத்து யுத்தத்தின் தார்மீக நோக்கம், அதன் வலிகள், வடுக்கள், சகோதரப் படுகொலைகள் போன்றதனைத்தினையும் முன்னைய படைப்புகளிலேயே அதிகம் பேசிவிட்டதனால் அதைத் தவிர்த்து / குறைத்து மனிதர்களின் மனப்போராட்டங்களை பிரதான விடயமாக்கி நாவலை…
-
அஷேரா! சொல்லாமல் சொல்லும் புதிர்கள் – ஜூட் பிரகாஷ்
ஆறாவடு. ஆதிரை, வரிசையில் வாசிக்கும் சயந்தனின் மூன்றாவது நாவல் தான் அஷேரா. யூதர்களின் ஒற்றைக் கடவுளான யாஹ்வேயிற்கு ஒரு மனைவி இருந்ததாகச் சொல்லப்படும் மனைவியின் பெயர் தான் அஷேராவாம். அஷேராவை வேதாகமத்தை எழுதிய பண்டைய யூதர்கள் வேண்டுமென்றே மறைத்து விட்டதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். யாஹ்வேயின் மனைவியான பெண் கடவுளான அஷேராவின் பெயரில் ஏற்பட்ட மயக்கம் தான், ‘ஆ’ வண்ணா வரிசையில் தனது நாவல்களிற்கு பெயரிட்டு வந்த சயந்தனை ‘அ’ வரிசைக்கு வரவழைத்திருக்கிறது போலும். அஷேரா நாவல்…
-
அஷேரா! நினைவுகளில் தொடரும் போர் – சுரேஷ் பிரதீப்
சயந்தனின் முதல் இரண்டு நாவல்களும் ஈழத்தில் நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்த போரைச் சித்தரிப்பவை. ‘ஆறாவடு’ நாவலானது அய்யாத்துரை பரந்தாமனிடம் நிகழும் மாற்றத்தின் வழியாக மட்டும் போரைச் சொல்லியது. ‘ஆதிரை’ நாவலின் களம் விரிவானது. அது சில தமிழ்க் குடும்பங்களின் தேசத்துக்கு உள்ளேயான தொடர் புலப்பெயர்வுகள், வீழ்ச்சிகள் வழியாக மிக விரிவாகப் போர் நிகழ்த்தும் அழிவுகளை அணுகியது. ‘ஆறாவடு’ நேர்க்கோடற்ற பாணியிலான நாவல். ஆதிரை காலவரிசைப்படி சீராகச் சம்பவங்களைச் சொல்லும் ஆக்கம். ‘அஷேரா’ நாவலைக் கட்டமைப்பின் அடிப்படையில் ‘ஆறாவடு’…
-
அஷேரா! அக உணர்வுகளின் திறப்பு – சுரேந்தர்
தமிழ் ஈழ போராட்டத்தைப் போன்ற குழப்படி மிகுந்த விடுதலைப் போராட்ட வரலாறு உலகில் எங்குமே காணக் கிடைக்காது. கொள்கை சாய்வுகளற்ற மூன்றாம் மனிதன் அதைப் புரிந்து கொள்ள தலைப்பட்டானானால் கிறுக்குப் பிடித்துப் போகும். என் பள்ளிக்காலத்தில் நான் நினைத்து இருந்தேன் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே பிரச்சினை. தமிழ் மக்கள் சார்பாக பிரபாகரன் தலைமையில் LTTE இருந்தது. பிறகு புலிகளுக்கும் கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் சிக்கல் இருப்பதை அறிந்துகொண்டேன். அதன்…