-
அஷேரா! பத்திரப்படுத்திய புத்தகம் – சவீதா சேந்தன்
அஷேரா… பெயரைக் கேட்டதும் ஏதோ சுவிட்சர்லாந்து பெண் தெய்வமோ? வரலாறு சம்பந்தப்பட்ட கதை என்றுதான் வாசிக்கத் தொடங்கினேன். அருள்குமரன்….எங்களில் ஒருவன்.. கூடவே 90களில் வாழ்ந்த யாழ்ப்பாணத்து இளைஞன்….நாவல் முழுவதும் அவனுடன் கூடவே பயணித்தேன்… அவன் அம்மா “ அப்பன் அம்மாவை பிழையாக நினைக்க கூடாதென்ற “ இடத்தில் நெஞ்சடைத்துப்போனேன். அமலி அக்கா… எரிச்சலை ஏற்படுத்திய ஒரு கதாபாத்திரம்… உண்மைகள் கசப்பானவைதானே… என்னைப்பொறுத்தவரை ஒரு சிறுவனின் உணர்வுகளோடு விளையாடிய ……. அவ்வளவுதான். ஆராதனாக்களை எல்லா இளைஞர்களும் சந்திப்பதில்லை. சந்திப்பவரகள்…
-
அஷேரா! ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா
‘ஏரி பெரிய இருள்ப் படுக்கையைப் போல விரிந்துகொண்டே போனது…’. மனதின் ஒவ்வொரு இருள் படுக்கையாக உரித்து உரித்து எடுத்து, சில நாட்களுக்கு ஆப்கானின் வரண்ட மலைகளாக நிச்சலனத்துடன் வெறித்து மட்டுமே நிற்க வைத்தது அஷேரா எனும் ஆழமான நாவல். காமமும், கோபமும் உயிர்க்குணங்கள். பிரிக்க முடியாதவை. இருள் போர்த்தியவை. காமத்திற்கு இருட்டின் மறைப்பும், கோபத்திற்கு இருண்ட மனம் அல்லது இருண்ட செய்கை மீதான ரௌத்திரமும் தேவைப்படுகிறது. இவை உந்துதலை (Drive) அடிப்படையாகக் கொண்டவை. போர் கூட அவ்வாறே….
-
‘அஷேராவின்’ புனைவுத் தளத்தை விரிவாக்கத் தூண்டும் வாசகப்பணி இது – அசுரா
நாவலின் ஆசிரியரின் குறிப்பு எனும் இறுதிப்பகுதியும், அதுவே இந்தப் புனைவின் ‘ஆசிரியரான’ சயந்தனின் குரலாகவும் கருதி, இப்பிரதியின் பின்னல்களை அவிழ்க்க வேண்டியதான ஒரு வாசிப்பு அனுபவத்தை என்னால் உணரமுடிகிறது. இலக்கியப் படைப்பாளிகளை, தத்துவ சிந்தனையாளர்களை, வரலாற்று ஆய்வாளர்களை ஆசிரியர்கள், ஆசான்கள், எனும் பொருள்பட அழைப்பதன் உட்பொருள் என்ன? இவர்களும் தமது சுயமான தத்துவ சிந்தனைகளூடாகவும், சுயமான இலக்கியப் புனைவுகளூடாகவும் வெளிப்படுத்தும் சம்பவங்களை வாசகர்கள் புதிதாகத் தேடிக்கண்டடையும்போது, அவர்கள் ஆசிரியர்களாகவும், ஆசான்களாகவும் வாசக மனங்களில் உணரப்படுகிறார்கள். ஆயினும் நிறுவனக்…
-
மனப்பிறழ்வின் நாட்குறிப்பேடு அஷேரா – தி.லலிதகோபன்
அறிமுகம் சயந்தன் கதிர் என்று அழைக்கப்படும் சயந்தன் அவர்களின் மூன்றாவது நாவல் பிரதி அல்லது ஆதிரைக்கு பின்னரான பிரசவம் என்றோ இந்த அறிமுகத்தினை சுருக்கமாக நான் கடந்து விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சில செய்திகளை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. முதன்முதலாக “ஆதிரை” என்ற பெயரினை முகநூலின் மூலமாக கேள்வியுற்றதன் பின்னர் நான் அந்த நூலினை வாசிப்புக்காக தேட முற்பட்டதன் காரணம் “ஆதிரை” என்ற பெயர் என்னுள் ஏற்படுத்தியிருந்த மயக்கமே. இதை பிரமிள் அவர்களின் மொழிதலில் குறிப்பிடுவதானால்…
-
அந்நிய நிலத்தின் மௌன ஓலம் – வேலு மாலயன்
புலம்பெயர் படைப்பாளர்களில் ஆறாவடு மற்றும் ஆதிரை நாவல்கள் வழியே தமிழ் இலக்கிய பரப்பில் மிகுந்த கவனத்தை சம்பாதித்தவர் எழுத்தாளர் சயந்தன் அவர்கள்.சயந்தனின் முந்தைய இரண்டு நாவல்களிலிருந்த போர்,அரசியல் ஆகியவற்றிலிருந்து விலகி எழுதப்பட்டுள்ளது புதிய நாவலான அஷேரா. ஈழத்தில் தமிழராய் பிறந்து இனப் போரின் வலி மற்றும் துயரில் உழண்ட ஒருவர் அவரது படைப்புகளில் அந்த வலியின் துயரை,உணர்ச்சிகள் மேலோங்க பதிவு செய்வது என்பது எப்போதும் தவிர்க்க முடியாதது. ஆனால் சயந்தனின் படைப்புகள் உணர்ச்சிகளின் வெளியிலிருது ஈழத் தமிழர்களின்…
-
நிறைவான வாசிப்பு – சரவணன் மாணிக்கவாசகம்
அஷேரா நாவலை ஒரே கதையாகப் படிக்கலாம், இல்லை கதைகளின் தொகுப்பாகவும் படிக்கலாம். அருள்குமரன் காமத்தை எதிர்கொள்ள முடியாது, தற்கொலை செய்வதற்குப் பதிலாக இயக்கத்தில் சேர்கிறான். அவனது அம்மாவின் கதை ஒரு தனிக்கதை. ஒருவகையில் அருள்குமரனின் நிலைமைக்கு அவளே காரணம். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நஜிபுல்லாவின் கதை. பயந்து நடுங்கும் அற்புதத்தின் கதை. கனவுக்குமிழி உடைந்து குடும்பவன்முறையை சகித்துக் கொள்ளும் அபர்ணாவின் கதை. அனாதையாய் பல இன்னல்கள் அனுபவித்து பின் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அவந்தியின் கதை. சின்னக் கதைகள்…