-
கதை எழுதுவது என்பது கணித சமன்பாடு அல்ல
“கதை எழுதுவது என்பது கணித சமன்பாடுகளில் எழுதுவது போன்ற விடயம் கிடையாது. தொடர்ச்சியான வாசிப்பும், பயிற்சியும் தான் சம்பவங்களை கதைகளாக்கும் ஆற்றலை எமக்கு அளிக்கவல்லன” என்ற தன் கருத்தோடு திரைப்படக்கதைகளை தேர்ந்தெடுப்பது எவ்வாறு? என்ற விடயத்தை தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக நேற்றைய தினம் (2020.06.07) எம் பட்டறைக்குழு மாணவர்களுடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்ட ஈழத்து எழுத்தாளர் சயந்தன் கதிர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். போர் கால அனுபவங்களையும், அவலங்களையும் தன்னுடைய எழுத்தின்…
-
ஆறாவடு! இது எங்கள் கதை…
சயந்தனின் ஆறாவடு குளிரும் இரவொன்றில், வானம் நட்சத்திரங்களை மேகங்களுக்குள் ஒளித்து வைத்த இராத்திரியொன்றில், அரை வயிறு உணவும் இரப்பைக்குள் சுழன்று தொண்டைக்குள் தாவும் நிமிடங்களில், கால்கள் கொடுகிக் கொண்டிருக்க, தூக்கத்தின் பிடியிலிருக்கும் கண்களை இமைகள் மூடாமல் காவல் செய்திருக்க, ஒரு சாரத்தை இழுத்துப் போர்த்தியபடி, பெருங்கடல் வெளியொன்றில், திசைகளைத் தின்றபடி மேலும் கீழும் குதித்து விழுந்து ஓடிக்கொண்டிருக்கும், படகு நிச்சயம் இத்தாலிக்கு தான் பயணமாகிறது எனும் சொச்ச நம்பிக்கையில் தாய் நிலத்தை விட்டு பரதேசிகளாக, அகதிகளாக, நிலமற்றவனாக…
-
ஆதிரை ஒரு பெரும்படைப்பு
இரண்டு வாரங்களில் 4 புத்தகங்களை வாசிக்க முடிந்தது. நண்பர் பத்திநாதனின் கையிலிருந்த சயந்தன் எழுதிய ‘ஆதிரையை’ வாங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். 640 பக்கங்கள் என்பதால் எடுக்கமுடியாமலே இருந்தது. பழைய வேகம் இல்லையென்றாலும் 4நாட்களில் வாசிக்க முடிந்தது. ஈழத் தமிழரிடமிருந்து வரும் படைப்புகளைப் பெரும்பாலும் வாசித்து வருபவன் என்றவகையில் இந்த நாவல் மிக முக்கியமான படைப்பு. 1980 களின் தொடக்கத்திலிருந்து 2010இன் தொடக்ககாலம் வரையிலான அகன்ற பரப்பில் பயணமாகிறது. பொதுவாக ஈழப்படைப்புகளை எழுதுவது வாசிப்பது விமர்சிப்பது என்பதான…
-
ஆதிரை! ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப்போல அனுபவம்
சயந்தன் எழுதிய ஆதிரை நாவலை முன்வைத்து “வரலாறு அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகிறதோ அவர்களுடைய விருப்பமானதையும், வேண்டியதையும் மட்டும் சொல்லும்” என்பதற்கு மாறாக ஒரு இனம் நிலமற்று,நிம்மதியற்று, உயிர் பதைக்க இன்னொரு இனத்தால் துரத்தப்பட்ட,சிதைக்கப்பட்ட ஈழத்து தமிழர்களின் வலியின் வரலாற்றை மக்கள் பார்வையில் ஆதிரை நாவல் பதிவு செய்கிறது. ஈழத்து மக்கள் மீது நிகழ்ந்த இனப்படுகொலைகளின் முப்பதாண்டு மூச்சு முனகலின் வரலாறு ஆதிரை. சிங்கமலை தங்கம்மை,ஆச்சிமுத்து கிழவியின் மூத்த மகன் நடராசன் அவனது மனைவி கிளி,ஆச்சி முத்து…
-
ஆதிரை – உள்ளும் புறமும்
ஆதிரைக்கான எனது தேடல் மிக நெடிது. இந்த புத்தகம் குறித்தான சில குறிப்புக்களை முக நூலில் படித்த காலத்திலிருந்து கிடத்தட்ட ஐந்து வருடங்களின் பின்னரே இந்த புத்தத்தினை வாசிக்க கிடைத்தது தம்பி ஜெனோஜனின் புண்ணியத்தினால். ஒரு நூல் அல்லது நாவலுக்கான பீடிகை இன்றி அதாவது முன்னுரை, முடிவுரை, பதிப்புரை போன்ற இன்னோரன்ன உரைகளின்றி அமைந்திருப்பது அதனுடைய புறச்சிறப்பு. அதற்க்கு பீடிகைகள் எதுவும் தேவையில்லைதான். ஏனெனில் அங்கே வரும் பாத்திரங்களும், சம்பவங்களும் நாம் அறியாததோ அல்லது அனுபவப்படாதவையோ அன்று….
-
போர் ஒரு பொழுதுபோக்கு அல்ல
சயந்தனின் ஆதிரை படித்தேன். தமிழீழப் போராட்டத்தின் துவக்கப் புள்ளியான 1977 கலவரம் துவங்கி 2009 இறுதிப் போர் முடிந்து நிவாரணப் பணிகளுக்கான குழு அமைதல் வரையிலான பரந்த வரலாற்றுப் புதினம். தமிழ் ஈழம் குறித்த தெளிவு இல்லாதவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல். காஷ்மீர் பிரச்சினையோ ஈழப் பிரச்சினையோ தாம் நம்பும் சித்தாந்தத்தின் வாயிலாகவும் தாம் விரும்பும் தலைவர்களின் நிலைப்பாடுகளின் அடிப்படையிலாகவும் ஏதோ ஒரு பக்கம் நிலையெடுத்து கம்பும் சுற்றும் போக்குதான் நம்மிள் பெரும்பாலோருக்கு உண்டு. சம்மந்தப்பட்டவர்கள்…