-
சமகால இலக்கியக் குறிப்புகள்
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்ற ஜெயமோகனது கூற்று எனக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை. ஒருவேளை, அவர் அது இனப்படுகொலையே என்றிருப்பாரானால் மாத்திரமே, “இல்லையே.. இவர் இதைச் சொல்வது தப்பாச்சே.. ஏதேனும் hidden agenda இருக்குமோ ” என்று யோசித்திருப்பேன். மற்றும்படி இலங்கையில் இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று கோத்தபாய ராஜபக்ச சொன்னபோது எப்படிக் கடந்துபோனேனோ அப்படித்தான் கடந்துபோனேன். தவிரவும், ஈழத்தமிழர்களுக்கான ஒரு தீர்வு தமிழகத்தில் இருந்து ஒரு போதும் வராது என்று தீர்க்கமாக நம்புகிறவனாகவும் நானிருப்பதால், ஜெயமோகனது இக்கூற்றுக்கு…
-
ராஜ சுந்தர ராஜன்
“ஆதிரை”, இனப்போர் தன் நச்சுப்பற்களால் தேயிலைத் தோட்டத் தமிழர்களையும் தீண்ட, அங்கிருந்து இடம்பெயரும் இந்தியவழித் தமிழர்களோடு தொடங்கி, அவர்கள் சக்கிலியர்கள், வடக்குமுகமாக வளர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டு, சற்று தெற்காமை வந்து, அம் மக்களோடு ஒண்ணுமண்ணாப் புழங்கும் சந்திரா-அத்தார் தம்பதி வழியாக விமர்சனக்கோணமும் பெறுகிறது. சந்திரா வெள்ளாளத்தி, அத்தார் அம்பட்டர். இதில் நாயகர்கள் என்று எவரையும் முன்னிருத்த ஏலாது. நாவல் சம்பவங்களால் நகர்கிறது. சம்பவங்களும் ஒருநேர்க்கு என்றில்லாமல் முன்னும்பின்னுமாய் வைக்கப்பட்டிருக்கின்றன. ‘புலி’ லெட்சுமணன் பற்றிக் கூறும் முதல் அத்தியாயமும்,…
-
முருகபூபதி
வன்னி மக்களின் ஆத்மாவைச் சொல்லும் சயந்தனின் ஆதிரை போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் sayanthanவசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்) மணம் முடித்துக்கொடுத்தார்கள். 1966 ஆம் ஆண்டில் நீர்கொழும்பில் அக்காவின் திருமணம் நடந்தபொழுது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்கா மலையகத்தில் குடியேறியதனால் …
-
கோணங்கி
சயந்தனின் ஆறாவடு நாவலுக்கு இதழில் வந்த மணிமாறனின் வாச்சியத்திற்குப் பின் இப்போது வந்திருக்கும் ஆதிரை நாவல் அளவில் பெரியதாயினும் தன் தீவு நிலத்தின் அகப்பரப்பில் மலையக சாயல்களோடு பெயர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் கதை தான் நாவலாகி இருக்கிறது. ஆறாவடு நாவலோ அளவில் சிறியதாயினும் கால் இழந்த போராளியின் செயற்கைக் கால் கடல் கடந்து பயணிப்பதால் அதன் நவீனம் புனைவாக சாத்தியமாகி இருக்கிறது. ஆதிரை நாவலோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலாக மாறியிருப்பதிலிருந்து டொனால் பார்த்தல் மேயின் டால்ஸ்டாயின்…
-
மங்கை செல்வம்
அழுகை, அச்சம், கையாலாகாத கோபம், ஒரு விதமான சுயவெறுப்பு எல்லாமுமாக ஆதிரையை முடித்தேன். எல்லாருக்கும் நியாயம் இருப்பது போல் ஆனால் எதற்குமே அர்த்தம் இல்லாதது போலும்… நண்பரொருவர் சொல்லியது போல் வன்னியின் எளிய மக்கள்படும் துன்பத்தை விட அவர்கள் எல்லோராலும் நடத்தப்படும் அவலம். Racial purity ethnic supremacy எல்லாம் எவ்வளவு குரூரமும் அபத்தமுமானவை. ஆற்றொழுக்காக செல்ல வேண்டிய எவ்வளவு பேருடைய வாழ்க்கையும், உறவுகளும், உணர்வுகளும் நம்பிக்கைகளும் கருகி போயிருக்கு. எங்குமே நிலைத்து வாழ முடியாம எவ்வளவு…
-
ஹரி ராசலெட்சுமி
மறுமை அரங்கு 1/வரலாற்றின் தேவதூதாய் இலக்கிய எழுத்து போர் முடிந்தது, சந்தை திறந்தது சரிதான் என்று நகர்ந்து விட முடியாத நிலை எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றுதான். வரலாறு முடிந்து போய் விட்டதென்ற உள்-உணர்வினாலும், உத்தரவாதமற்ற சுதந்திரத்தாலும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று அன்றாடம் புதிய நியதியாகியிருக்கிறது. தட்டையாக்கும், ஒன்றாக்கும் வெற்று அன்றாடம். எது எப்படியோ, எம் துறை எழுத்து! எழுத்தின் வலு, உபயோகம் மற்றும் பொருத்தப்பாடு பற்றி எம்மிடம் எவ்வளவுக்கு அவநம்பிக்கை உண்டோ, அந்தளவுக்கு நம்பிக்கையும் உண்டு. சுயவரலாறின்மையின்…