-
தமிழ்நதி
எந்தவொரு படைப்பையும் முன்முடிவுகளோடு வாசிக்கக்கூடாதென அண்மைக்காலமாக எண்ணுகிறேன். ஆனால், முகநூலும் சில இணையப் பதிவுகளும் தந்த சித்திரங்களை எளிதில் துடைத்தழித்துவிட்டு வாசிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். அதிலும் குறிப்பாக அ.இரவியால் எழுதப்பட்ட விமர்சனங்கள்… பிடித்த குழந்தையை கொஞ்சிக் கொஞ்சி கன்னம் வலிக்கப் பண்ணும் நேசம் அது. முப்பதாண்டு கால வரலாற்றின் (அது எப்போதும் பகுதி வரலாறே) நெடுக்குவெட்டுத் தோற்றத்தை புனைவின் ஓரம்சமாகிய அழகியல் கெடாது கொணர்வதென்பது இலகுவான வேலையன்று. இலக்கியகர்த்தாக்கள் குழுக்களாகப் பிரிந்து இயங்கும் துரதிர்ஷ்டவசமானதொரு…
-
அ.இரவி (பொங்குதமிழ் இணையம்)
2011 நத்தார் தினங்களில் ஒன்று. ‘ஒருபேப்பர்’ வைத்த விருந்து ஒன்றில் சயந்தன் சொன்னார். “நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்.” நான் நினைத்தேன்: ‘அது இலேசான காரியமோ? சிறுபிள்ளை வேளாண்மை. வீடு வந்து சேர்ந்தாலும் உண்ண முடியாதது.’ பிறகு சயந்தன் சொன்னான். “அந்த நாவலுக்கு இயக்கம் என்று பெயர் வைத்திருக்கிறேன்.” மீண்டும் நான் நினைத்தேன்: ‘இது ஒரு பாஷன். ஷோபாசக்தி கொரில்லா என்று வைத்தார். இப்ப இவர் இயக்கம் என்கிறார்.’ அந்த விருந்து நன்றாக நடந்தது. நான் ‘நினைத்ததை’…
-
சின்ராசு மாமா
சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் முன் தள்ளியவாறு இருக்க மணிக்கொரு தடவை அவர் சிகரெட்டை ஊதித்தள்ளுகிறார் என்று அர்த்தம். அப்போது இடுங்கிய கண்களில் மகிழ்ச்சி மேவியிருக்க இரண்டொரு…
-
யூட் ப்ரகாஷ்
“ஆதிரை” என்ற இலக்கிய செழுமை நிறைந்த ஒரு தரமான நாவலை விமர்சிக்கும் தகைமை எனக்கில்லை. எம்மினத்தின் வலிகள் சுமந்த ஒரு புத்தகத்தை, எங்கள் போராட்டத்தின் இன்னுமொரு பிம்பத்தை வரைந்த ஒரு நாவலை, போர் சுமந்த வன்னி மண்ணின் அவலத்தை மீட்ட ஒரு பதிவை, நாங்கள் தப்பியோடி வெளிநாடு வந்து விலாசம் காட்டி கொண்டிருப்பதை கண்முன் கொண்டு வந்த மனசாட்சியின் மறுவுருவத்தை, வாசித்த ஒரு சாதாரண வாசகனாக எனது வாசிப்பனுவத்தை பகிருவதே, இந்த பதிவின் நோக்கமாக அமைகிறது. “எதிரிகளை…
-
தேவிகா கங்காதரன்
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அறவழியிலும் பின்னர் ஆயுதம் தாங்கியும் தொடரப்பட்ட ஈழத்தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்தில் வந்து நின்றது.இந்தக் காலகட்டத்தின் 1977தொடக்கம் 2013ம் ஆண்டைத் தாண்டி முகமாலையில் ஏ ஒன்பது வீதிக்கு அண்மையில் மிதிவெடி அகற்றும் காலம் வரை ” ஆதிரை ” நாவலில் பேசப்பட்டுள்ளது. எடுத்துக் கொண்ட கரு காரணமாக ஒரு பெரிய நாவலாக வெளிப்பட்டிருக்கிறது ஆதிரை.தமிழர் வாழ்வும், இலங்கைத்தீவில் அவர் வாழ்வில் ஊடாடும் நெருக்கடிகளும், சவால்களும், கொலைகளும்,…
-
மலைநாடான்
அதிகாலை 3.45. புத்தகத்தை மூடி வைத்துவிட்டெழுந்து, சாளரத்தின் திரை விலக்கிப் பார்க்கின்றேன். காணவில்லை… கதவு திறந்து பலகணிக்கு வந்தேன். உனது நிலமல்ல… குளிர் முகத்திலறைந்து சொன்னது. இருக்கலாம், ஆனால் ஆகாயம்.. ? அந்தப் பொதுமைப் பரப்பில் தேடினேன். பிரகாச நட்சத்திரங்கள் இருபதில், பத்தாவது இடம் ஆதிரைக்கு. காணவில்லை…அல்லது கண்டுகொள்ளத் தெரியவில்லை. நீலத்தின் நிர்மலத்தில் கரைந்து போனோளோ..? கலந்து போனாளோ..? தவிப்போடு திரும்பினேன். ” மன்னிச்சுக்கொள்ளு ஆத்தை..” சிவராசன் குளறியது என்னுள்ளும் எதிரொலிப்பதாக உணர்வு. ஆற்றாமையை அழுது தீர்க்கவேண்டுமான…